×

பூங்கா, சாலை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை மாற்ற நடவடிக்கை: ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் உறுதி

ஆலந்தூர், பிப்.10: கவுன்சிலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பூங்கா, சாலை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல குழு தலைவர் என்.சந்திரன் உறுதியளித்தார். சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டல குழு கூட்டம் கிண்டிமண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், செயற்பொறியாளர் உமாபதி, பகுதி சுகாதார நல அலுவலர் சுதா முன்னிலை வகித்தனர்.

இதில் 20 தீர்மானங்கள் நிறைவேறியது. மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் பழுதடைந்த நீர்நிலை தேக்கத்தொட்டி உடைக்கப்பட்ட இடத்தில், இதுவரை கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தரவில்லை, நங்கநல்லுாரில் உள்ள தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உளளது, நந்தம்பாகம் துளசிங்கபுரம் பகுதியில் பாதாள சாக்கடை கொண்டுவர கன்டோன்ெமன்ட் நிர்வாக அனுமதி பெற்றுத்தர, நங்கநல்லூர் சுதந்திர பூங்காவை சீரமைக்க, மாதவபுரம் பகுதி மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க, சாலை பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் பேசும்போது; பூங்கா மற்றும் சாலைப்பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும், கவுன்சிலர்கள் கேட்கும்போதெல்லம் தெருவிளக்கு தளவாட பொருட்கள் இல்லை என அதிகாரிகள் கூறக்கூடாது. மேலும், ஸ்பெயின் நாட்டுக்கு சென்று முதலீடு பெற்று தாயகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அவை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

The post பூங்கா, சாலை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை மாற்ற நடவடிக்கை: ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Alandur Zonal Committee ,Alandur ,Zonal Committee ,N. Chandran ,Chennai Corporation ,Alandur 12th Zonal Committee ,Kindimandal ,Dinakaran ,
× RELATED சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய்...